
உத்திரபிரதேசம் மாநிலத்தில் மருத்துவத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை அரசு அதிகரித்து வருகின்றது. அதன்படி ஆதித்யநாத் அரசு இந்தியா மெஷின் ரோஸ்கர் என்ற திட்டத்தின் மூலம் கலந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பத்தாயிரம் இளைஞர்களுக்கு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று துணை பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 1573 பணியாளர்களுக்கு முதல்வர் பணிநீயமான ஆணைகளை வழங்கினார். மேலும் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ள இளைஞர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் எதிர்காலத்தில் மாநிலத்தில் கூடுதலான இளைஞர்களுக்கு சுகாதாரத் துறையில் பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.