
ஷாருக்கான் நடிப்பில் டைரக்டர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படம் “ஜவான்”. இப்படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் போன்றோர் நடித்து உள்ளனர். வருகிற ஜூன் 2ம் தேதி இப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில், விஎஃப்எக்ஸ் பணிகள் காரணமாக வெளியீட்டு தேதி மாற்றப்பட இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஜவான் படத்தை அடுத்து பாலிவுட் நடிகர் வருண் தவானை டைரக்டர் அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “கபீர் சிங்” படத்தை தயாரித்த முராத் கேதான் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஜூலை (அ) ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்படலாம் எனவும் அடுத்த வருட கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.