இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் அனைத்து வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த விவரத்தை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வரும் நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 நாட்களுக்கு கொண்ட பிப்ரவரி மாதத்தில் வங்கி ஊழியர்களுக்கு 11 நாட்கள் விடுமுறையாகும். இருந்தாலும் இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 04.02.2024 – ஞாயிறுக் கிழமை
  • 10.02.2024 – இரண்டாம் சனிக்கிழமை
  • 11.02.2024 – ஞாயிறுக் கிழமை
  • 14.02.2024 – வசந்த பஞ்சமி அல்லது சரஸ்வதி பூஜை (திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம்)
  • 15.02.2024 – லுய் நாயகி நிக் திருவிழா / நாகா பழங்குடியினரின் அறுவடை திருவிழா (மணிப்பூர்)
  • 18.02.2024 – ஞாயிறுக் கிழமை
  • 19.02.2024 – சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் (மகாராஷ்டிரா)
  • 20.02.2024 – மாநில தினம் (மிசோரம், அருணாச்சல பிரதேசம்)
  • 24.02.2024 – நான்காம் சனிக்கிழமை
  • 25.02.2024 – ஞாயிறுக் கிழமை
  • 26.02.2024 – நியோகம் திருவிழா (அருணாச்சல பிரதேசம்)