
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒரே வகுப்பு என்பதால் அவர்கள் பேசி பழகுவதை யாரும் தவறாக நினைக்கவில்லை. இதன் காரணமாக பள்ளியில் வைத்தே இருவரும் காதலை வளர்த்தனர்.
இருவரும் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிய நிலையில் சில நேரங்களில் மாணவன் அந்த மாணவியை ஆடை இல்லாமல் வருமாறு கூறியுள்ளார். இதை நம்பிய மாணவியும் அந்த மாணவருடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதோடு சில நேரங்களில் அரைகுறை ஆடையுடனும் பேசியுள்ளார்.
இதனை தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்த மாணவன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு தன்னுடைய நண்பர்கள் சிலருக்கும் அனுப்பியுள்ளார். இந்த ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் இது பற்றிய மாணவிக்கு பெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தன் பெற்றோருக்கு விவரத்தை கூறினார். உடனடியாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.