இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியூடுவதாகவும் ஆச்சரியப்பட வைப்பதாகவும் இருக்கும். சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் வாங்குவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இது தொடர்பான செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது.‌ சிலர் இளைஞர்கள் ஆபரத்தை உணராமல் விபரீதத்தில் ஈடுபடும் நிலையில் தற்போது அதே போன்று ஒரு வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது இரு வாலிபர்கள் 11 லிட்டர் பெட்ரோலை ஒரு பாக்கெட்டில் வைத்து அதில் ஒரு திரி போட்டு கொளுத்தி விடுகிறார்கள். அது வெடித்தது. பின்னர் அது வெடித்த இடத்தில் சென்று ஒரு அணுகுண்டை வைத்து கொளுத்தி விடுகிறார்கள். அந்த வாலிபர்கள் நிற்கும்போது அந்த அணுகுண்டு வெடித்து சிதறிய நிலையில் பெட்ரோல் சிதறிய இடங்களில் எல்லாம் தீப்பற்றி எரிகிறது. அதன்பிறகு தீ மளமளவென பற்றி எரிகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Tarun (@tarunbliz6)