
சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து செய்து கோவையை சேர்ந்த 11 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சுப்புகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கோகுல் கிருஷ்ணா சிறு வயது முதலே தற்காப்பு கலை பயின்று வருகிறார். இந்நிலையில் கோகுல் கிருஷ்ணா உலக பெற்றோர் தினத்தை முன்னிட்டு சிலம்பம், சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு உள்ளிட்ட 5 ஆயுதங்களை பயன்படுத்தி சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து பாரம்பரிய கலைகளை செய்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.