அமெரிக்காவின் கன்டன் பகுதியில், பூங்காவில் 11 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 20 வயதான டெஸ்டனி ஸ்காட் மீது தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கிளார்க் அவென்யூ SW பகுதியில் உள்ள பூங்காவில் இந்த சம்பவம் நடைபெற்றது. டெஸ்டனி ஸ்காட், 11 வயது சிறுமியின் தாய் பேஜ் டிஷோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சிறுமியின் தலையை பூங்காவில் உள்ள இரும்பு ஸ்லைடு மீது பலமுறை ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சிறுமி உயிரிழக்க வேண்டும் என்று அவரது தாயிடம் ஸ்காட் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்டு கோபமடைந்த சிறுமியின் தாய் ஸ்காட்டை அடிக்க  முயற்சி செய்துள்ளார்.

கன்டன் நகர நீதிமன்றத்தில், ஸ்காட் மீது கொலை முயற்சி, கடுமையான தாக்குதல், கைது செய்ய எதிர்ப்பு, அதிகாரப்பூர்வ பணிகளைத் தடை செய்தல் மற்றும் சட்டமன்ற ஒழுங்கு மீறல் ஆகிய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.