
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த அல்லது தேர்வு எழுதாத மாணவர்கள் அனைவருக்கும் துணைத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் துணை தேர்வை எழுத இருக்கும் மாணவர்கள் வருகின்ற மே 14 முதல் மே 17ஆம் தேதி வரை தோல்வியடைந்த பாடங்களுக்கு மட்டும் விண்ணப்பித்தனர். இதனைத் தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு பட்டியலை அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு வருகின்ற ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 26 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. மாணவர்கள் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி முதல் dge.tn.gov.in என்ற இணையதளம் முகவரி மூலமாக தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் dge.tn.gov.inஎன்ற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தங்களுக்கான கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.