
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை அணுகவும்.