
தமிழகம் முழுவதும் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாட்டவயல் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார்.
இந்நிலையில் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி, ஆம்புலன்ஸ் மூலம் Stretcher-ல் அழைத்து வரப்பட்டு 11ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார். உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதிலும், மனம் தளராமல் உதவியாளர் மூலம் தேர்வை எழுதிய மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.