
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஹால் டிக்கெட்டை பிப்ரவரி 20 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல 11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் தனி தேர்வர்கள் பிப்ரவரி 19 முதல் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.