12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் மூன்றாம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பள்ளி கல்வித்துறை வெளியிடுகிறது. அந்த ஹால் டிக்கெட் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து விவரங்களை உறுதி செய்த பிறகு விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.