
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இன்று ஒரு சில இடங்களில் தமிழகத்தில் 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று கனமழை காரணமாக 23 பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாலு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே சமயத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உறவாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று சென்னை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோவை, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 27 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.