வியன்னாவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் 12 முறை விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்துள்ளனர். அவர்களது 43 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் 12 முறை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 வருடங்களாக அவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களது வீட்டில் இருந்து சண்டை சச்சரவுகள் போன்ற எந்த விதமான சத்தமும் எங்களுக்கு கேட்கவில்லை. இருவரும் காதல் ஜோடி.

ஆனால் ஏன் விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. ஆஸ்திரிய அரசாங்கம் விதவைகளை ஆதரிப்பதற்காக இந்திய மதிப்பில் 24 லட்சம் ரூபாய் நிதியாக கொடுக்கும். சட்டபூர்வமாக கணவனை விவாகரத்து செய்யும் போது அந்த பணம் அந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும். இந்த தம்பதியினர் ஒவ்வொரு முறை விவாகரத்து செய்யும் போதும் பணத்தை பெற்றுக் கொண்டு மீண்டும் மறுமணம் செய்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் அந்த பெண் தனது கணவரை 12 வது முறையாக விவாகரத்து செய்தார். பின்னர் அரசாங்க நிதி உதவிக்காக பென்ஷன் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகிய போது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. கணவன் மனைவி இருவரும் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 11 முறை அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி பெற்றுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்m