சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லிக்கரையில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அதே பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவி அழுதுகொண்டே கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்ததில் சக மாணவர்களே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. ஒரு மாணவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்றொரு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.