மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் தனியார் டியூஷன் சென்டர் வந்துள்ளார். இவரை டியூசன் ஆசிரியை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் நிர்வாணமாக நடக்க வேண்டும் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை அந்த ஆசிரியை  மீது புகார் அளித்துள்ளார், இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில் “பயிற்சி வகுப்புக்கு வந்த 12 வயது சிறுவன் கழிவறைக்கு சென்றிருந்த சமயம் அவரது நண்பர் கழிவறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி உள்ளார்.

இதனால் உள்ளே இருந்த சிறுவன் கதவை வேகமாக தட்டி உள்ளார். இதில் எரிச்சல் அடைந்த ஆசிரியை குடியிருப்பு பகுதியில் நிர்வாணமாக நடந்து செல்ல வேண்டும் என்று சிறுவனை மிரட்டியதோடு அவரது கையில் இரும்பு கம்பி கொண்டு தாக்கியுள்ளார். மத்திய அரசு நடத்தும் ராணுவத்திற்கான தேர்வை எழுதுவதற்கு தேவையான பயிற்சிகளை இந்த ஆசிரியை கொடுத்து வந்துள்ளார்.