இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது பலவிதமான ஏற்பாடுகளால் பல லட்ச ரூபாய் செலவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தலில் தொடங்கி பந்தி வரை தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர். அதாவது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வின் போது உணவு நிகழ்ச்சி மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அது என்னவென்றால் அவர்கள் பரிமாறப்போகும் உணவில் எவ்வளவு சதவீதம் கலோரிகள் இருக்கிறது என்பது குறித்த விவரங்களை மெனு கார்டு மூலம் அனைவருக்கும் தெளிவுபடுத்தும் வகையில் உணவு சாப்பிடும் இடத்தில் வைத்திருந்தனர். அதில் உணவை யாரும் வீணாக்க வேண்டாம் என்றும், எந்தெந்த உணவுகளில் எத்தனை சதவீதம் கலோரிகள் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அதில் தண்ணீர் முதல் கிட்டத்தட்ட 14 உணவுகள் இடம் பெற்றிருந்தது. அந்த உணவுகளின் மொத்த கலோரி 1200 என்றும் குறிப்பிடபட்டிருந்தது. அதோடு நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் நடனம் ஆட வேண்டும் என்பதும் அதில் இருந்தது. மேலும் இந்த மெனு கார்டு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.