12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய இன்று கடைசி நாள் ஆகும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை அறியலாம். ஒரு பாடத்திற்கு 275 ரூபாய் கட்டணம் ஆகும்.