
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரும் ஆளுநர்களாக பொறுப்பு ஏற்கிறார்கள். அதன்படி மணிப்பூர் ஆளுநராக இருந்த இல கணேசன் தற்போது நாகலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக கட்சியின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 13 மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம். அதன்படி,
1. அருணாச்சலப் பிரதேச ஆளுநர் – கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக்
2. சிக்கிம் மாநில ஆளுநர் – ஸ்ரீ லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா
3. ஜார்கண்ட் மாநில ஆளுநர் – சி.பி ராதாகிருஷ்ணன்
4. ஹிமாச்சல் பிரதேச ஆளுநர் – ஸ்ரீ சிவ் பிரதாப் சுக்லா
5. அசாம் மாநில ஆளுநர் – ஸ்ரீ குலாப் சந்த் கட்டாரியா
6. சத்தீஷ்கர் ஆளுநர் – ஸ்ரீ பிஷ்வா பூஷன் ஹரிச்சந்தன்
7. மணிப்பூர் ஆளுநர் – சுஷ்ரி அனுசுயா உய்க்யே
8. நாகலாந்து மாநில ஆளுநர் – இல. கணேசன்
9. மேகலாய மாநில ஆளுநர் – ஸ்ரீ பகு சவுகான்
10. பீகார் ஆளுநர் – ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
11. மகாராஷ்டிரா மாநில ஆளுநர் – ஸ்ரீ ரமேஷ் பயாஸ்
12. லடாக் துணை நிலை ஆளுநர் -ஸ்ரீ பிடி மிஸ்ரா
13. ஆந்திர மாநில ஆளுநர் – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர்