உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது 13 வயது சிறுமி ஒருவரை உள்ளூர் பாஜக தொண்டர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சிறுமியை கொலை செய்து சடலத்தை நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி பாஜக ஓபிசி மேச்சாவை சேர்ந்த ஆதித்யராஜ் என்பவரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.