அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக பழகியுள்ளார். படிப்பதற்காக சில நாட்கள் அந்த சிறுவன் லாராவின் வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு லாரா அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமான லாராவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. கடந்த டிசம்பர் மாதம் லாரா தனது மகனின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அந்த குழந்தை தனது மகன் சாயலிலேயே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது லாரா 13 வயதான சிறுவன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது உறுதியானது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.