
புதுச்சேரி காரைக்கால் அருகே இருக்கும் திருப்பட்டினத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 13 வயது ஆகிறது. நேற்று சந்தோஷ் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவனின் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அதாவது சந்தோஷுக்கு ஒரு அக்கா ஒரு தங்கை என இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே அந்த 17 வயது சிறுவன் சந்தோஷின் தங்கையிடம் தவறாக நடந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த சிறுவன் சந்தோஷ் மற்றும் அவரது தங்கையிடம் எனக்கு பிறந்தநாள் கேக் வெட்ட வாருங்கள் என கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து பதினேழு வயது சிறுவன் சந்தோஷின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தோஷ் சிறுவனை தட்டி கேட்டதால் கோபத்தில் துணியை வாயில் வைத்து அழுத்தி கத்தியால் சந்தோஷை குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.