
தெற்கு ரயில்வேயில், முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் செல்வோருக்கான பயண நேரத்தை குறைக்கவும் தெற்கு ரயில்வே சார்பில திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரையேயான 144 கிலோ மீட்டர் ரயில் பாதை சீரமைக்கப்படுகிறது.
தற்போது எழும்பூர் முதல் விழுப்புரம் வழித்தடத்தில் மணிக்கு 90-110 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இனி மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் பயண நேரம் 45 நிமிடம் வரை குறையும் என கூறப்படுகிறது