கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈரியூர் கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று
காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சத்யா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது 3 பாக்கெட் ஹான்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இது தொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது இன்னும் சில நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன்படி வளர்மதி,முருகேசன் மற்றும் சந்தானம் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் போதைப்பொருள் விற்பனையில் முக்கியக் குற்றவாளியான முத்துலிங்கம் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போது ரூ. 13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ போதை பொருள்கள் வைக்கப்பட்டிருந்த போலிரோ பிக், ஸ்கார்பியோ போன்ற 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போதை பொருள் விவகாரத்தில் தற்போது 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.