18 ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி  15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்யாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 14 வயதான வைபவ் சூர்யவன்சி உலக சாதனை படைத்துள்ளார்.

அதாவது 35 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இதில் 11 சிக்ஸர்கள் மற்றும்7 பவுண்டரிகள் அடங்கும். இவர் ஐபிஎல் போட்ட கிறிஸ் கெயிலுக்குப் பிறகு அதிவேக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதேபோன்று ஜெய்ஸ்வால் 71 ரன்கள் வரை எடுத்திருந்தார்.

இந்த போட்டியில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் வரை எடுத்தார். குறிப்பாக நான்காவது ஓவரில் 6 6 4 D 6 WD WD 4 என 30 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் விளாசிய இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதோடு ஐபிஎல் வரலாற்றில் அதிவேக ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி குறைந்த வயதில் ஆட்டநாயகன் விருதினையும் வென்றுள்ளார். இதன் மூலம் ஒரே போட்டியில் 3 சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் 14 வயதான வைபவ் சூர்யவன்சி. மேலும் இவருக்கு இணையாக ஜெயஸ்வாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ராஜஸ்தான் அணி நேற்றைய போட்டியில் எளிதாக வெற்றிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.