
சென்னையில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பம் ஆகி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்திய 14 வயது சிறுமி வீட்டிலிருந்துள்ளார். இந்த சிறுமியை அவருடைய சித்தப்பா பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார்.
அதாவது அந்த சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானதால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணி ஆக இருந்துள்ளார். அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த நிலையில் 38 வயதுடைய அந்த சித்தப்பாவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.