
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 26 வயதுடைய நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
என்னவென்றால் அந்த வாலிபர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சித்திரவதை செய்து வந்தார் . இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது தந்தையிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். இதனைக் கேட்டு கோபமடைந்த சிறுமியின் தந்தை அந்த நபரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 12-ம் தேதி சிறுமியின் தந்தை அந்த நபரை தனது வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் வாலிபரின் உடலை தீ வைத்து எரித்துள்ளார். மேலும் எரியாத உடல் பாகங்களை பாறைகளுக்கு அடியில் மறைத்து வைத்தது தெரியவந்தது. இதனால் சிறுமியின் தந்தையை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.