
நீலகிரி மாவட்டம் உதகையில் 14 வயதான தோடர் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று முன் தினம் இறுதி தேர்வு எழுதி திரும்பிய மாணவியை வழிமறித்த நபர் ஒருவர் காரில் கடத்திச் சென்று இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்ததில் ரஜ்நேஷ் குட்டன் என்ற 25 வயது மிக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.