
மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவின் போது வெயில் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு அரசின் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாகம் தான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் அரசு விழாவில் கலந்து கொண்ட போது வெயிலின் தாக்கத்தினால் 50 முதல் 70 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் அரசு உண்மையான உயிரிழப்பை மறைக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
வெயிலின் தாக்கம் மற்றும் போதிய குடிநீர் இல்லாமல் மக்கள் உயிரிழந்த போது ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு உங்களின் அரசு தான் காரணம். உங்களுக்கு தைரியம் இருந்தால், மனிதாபிமானம் இருந்தால் முதல்வர் ஏக்நாத் ஷண்டே, உள்துறை மந்திரி தேவேந்திர பாட்னாவிஸ், கலாச்சாரத் துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார் ஆகியோருக்கு எதிராக புகார் அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.