ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி அதிரடியாக பந்தை பிடித்த விதம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் போட்டியில், மிட்-ஆன் பகுதியில் களத்தில் இருந்த கேரி,  பேட்ஸ்மேன் ஃபில் சால்ட் அடித்த பந்தை அபாரமாக பிடித்து வெளியே அனுப்பினார். பிப் துவார்ஷுய்ஸ் வீசிய 2-வது ஓவரின் 4-வது பந்தில், சால்ட் பந்தை  மிட்-ஆன் பகுதியை நோக்கி அடித்தார். ஆனால், கேரி பந்தை எதிர்கொண்டு  அசால்ட்டாக டைவ் அடித்து பந்தை பிடித்தார். அசர வைக்கும் இந்த கேட்சிற்காக, சக வீரர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அந்த வீடியோவை பார்த்த X பயனர் , “அலெக்ஸ் கேரிக்கு ஒரு கால்பந்து பின்னணி இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கலாம் என குறிப்பிட்டார். “அற்புதமான கேட்ச், மிக உயர்ந்த தரத்தில் உள்ளது!” என மற்றொருவர் பகிர்ந்தார். இந்த கேட்ச் சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டியில் இன்றுவரை கண்ட சிறந்த பந்துபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.