
பூலித்தேவன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று காலை 6 மணி முதல் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும்.
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொது அமைதியை காக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நான்கு நபர்களுக்கு மேல் கூட்டமாகச் செல்லக் கூடாது. வாள், கத்தி, கற்கள் போன்ற ஆயுதங்கள் மற்றும் கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. வாகனங்களில் இந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.