அயோத்தியில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி சாலை பேரணியாக நடக்க உள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது . இதற்காக அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை வருகின்ற டிசம்பர் 30-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கின்றார்.

அன்றைய தினம் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை பேரணியாக நடந்து சென்ற பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் வந்தே பாரத், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.