சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனோடு பழக்கம் ஏற்பட்டது. கடந்த எட்டு மாதங்களாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணி இருக்கிறார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமியை கர்ப்பமாக்கிய அந்த சிறுவனை கைது செய்துள்ளனர் . மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.