நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 15 நிமிடங்களில் கடன் பெறும் வகையில் MSME என்ற புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

GST விற்பனை ரசீதுகளை ஆதாரமாகக் கொண்டு இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடி கடன் வழங்கப்படுகிறது. GST பதிவு செய்த நிறுவனங்களின் மூலதனத் தேவைகளை தொடர்வதற்கான குறுகிய கால கடன்களை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.  மேலும் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கியின்  இணையதளம் முகவரியில் அறியலாம்.