
இந்திய திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா .இவர் மாடல், டான்சர் என்று பல கதாபாத்திரங்களை கொண்டு ஜொலித்து வருகிறார் . இவருடைய திரை பயணம் 2005 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது . பல முன்னணி நடிகர்களோடு நடித்து வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சினிமா அனுபவம் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், சிறுவயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது .அதை நிறைவேற்றும் விதமாக என்னுடைய முடிவுகள் இருந்ததால் தற்போது சினிமாவில் நிலைத்து நிற்கிறேன்.
ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள் .இப்போது காலம் மாறியதால் ஓடிடியிலும் படங்கள் பார்க்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் 15 நொடி ரீல்ஸ் கூட ரசித்துப் பார்த்து மகிழ்ச்சி பெறுகிறார்கள் . ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர் நடிகைகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. அவர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ், நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது என்று கூறினார்.