ஈரோட்டில் 15 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய வட மாநில தொழிலாளி கைது
பிகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் தாகூர் (40) என்பவர், ஈரோட்டில் பாப்பாத்தி காடு பகுதியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமாகி மூன்று மகள்கள் உள்ள இவர், அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் ஆசை வார்த்தைகள் கூறி உறவுப் பேணி, அவளைக் கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ரமேஷ் தாகூரை கைது செய்து சிறுமியை மீட்டனர். இதையடுத்து, அவர்மீது போக்ஸோ சட்டம் மற்றும் கடத்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ் தாகூர், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.