
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி 19 வயது இளைஞர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த இளைஞர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் தொடர்ந்து இவர்களுடைய காதல் நீடித்துள்ளது.
இதனை சிறுமியின் தந்தை ஏற்காமல் இருந்ததால் சிறுமியின் தந்தையை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். இதனை அடுத்து இருவரும் சிறுமியின் தந்தை மற்றும் ஒன்பது வயது சகோதரனை கொலை செய்து அவருடைய உடல் பாகங்களை வெட்டி ஃப்ரீசருக்குள் வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த இளைஞரும் சிறுமியோடு தலைமறைவாகியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.