
உத்திரபிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் திருமணம் செய்யப் போவதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக தாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்து அங்கிருந்து போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களது பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து இரண்டு சிறுமிகளுக்கும் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சமீப காலமாகவே தன் பாலின காதல் இளம் வயதினர் மத்தியில் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.