கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் எடியூரப்பா. இவர் கர்நாடகாவின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். இவர் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் எடியூரப்பா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதோடு சம்மனுக்கு அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. மேலும் இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகி ‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.