தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றால் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழாக அரசு அறிவித்துள்ளது. அதாவது டான்சீட் திட்டம் என்பது கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதிலிருந்து, இதுவரை மொத்தம் 169 புதொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு, பெண்களை பங்குதாரராக கொண்டு செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 15 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. அதைப்போன்று மத்த தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படுகிறது. இதன் கீழ் கடன் வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் www.startuptn.in என்ற இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை வருகிற ஜனவரி 15 2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.