
லியோ திரைப்படம் குழந்தைகளுக்கானதல்ல, கண்டிப்பாக 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படுவார்கள் என படத்தின் விநியோகிக்கும் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.
அக்டோபர் 19 வெளியாக உள்ள லியோ திரைப்படம் முழுக்க வன்முறை மற்றும் சில வெறுக்கத்தக்க வார்த்தைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு வட்டார தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கு சான்றாக லியோ படத்தின் டிரைலரிலேயே தளபதி விஜய் அவர்கள் கெட்ட வார்த்தை ஒன்றை பேச அது பலரிடமும் பெரும் விவாத பொருளாக மாறியது. இதை தொடர்ந்து பலவிதமான வன்முறை காட்சிகள் ரத்தம் தெறிக்க, தெறிக்க படத்தில் இடம்பெற்று இருப்பதால், இது குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்குமா? என்ற கேள்வி பலரிடமும் தொடர்ச்சியாக இருந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் லண்டன் ல் படத்தை விநியோகிக்கும் நிறுவனமான அகிம்சா என்டர்டெயின்மென்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது. அதில், லியோ திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் அவர்களின் திரைப்படம் தான். தளபதி விஜய் அவர்களின் படம் என நினைத்து யாரும் திரையரங்கிற்கு எதிர்பார்ப்புடன் வர வேண்டாம். படத்தில் நாங்கள் நினைத்ததை விட ஏராளமான வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. BBFC யின் 12 A பிரிவின் கூற்றுப்படி இது குழந்தைகளுக்கான படம் கட்டாயம் கிடையாது. அவர்கள் இதை கண்டதும் முதலில் 18 வயது வரம்புடையவர்களுக்கு மட்டுமே என நிர்ணயிக்க கோரி உத்தரவிட்டிருந்தனர். அதன் பின்,
சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டு படம் தற்போது 15 வயது க்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது. அதற்கு கீழ் உள்ள 4 லிருந்து 14 வயதுக்குள் இருக்கும் தளபதி அவர்களுக்கு இருக்கக்கூடிய ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தின் நிலைமையை நாங்கள் அறிவோம். அவர்களுக்காக நாங்கள் பின்னாளில் ஓரிரு வாரங்கள் கழித்து கூட ஒரு சில காட்சிகளை நீக்கியோ அல்லது அதை எடிட் மூலம் மென்மையாக்கி (Blur) செய்து மீண்டும் திரையிட முடியும்.
ஆனால் அது படத்தின் மீதான அசல் தன்மையை பாதிக்கும். அது நல்ல அனுபவத்தை கொடுக்காது. இந்த படம் முழுவதுமாக தியேட்டர்காகவே வடிவமைக்கப்பட்டது. எனவே அதில் எந்த ஒரு மாற்றத்தையும் எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் நாங்கள் தற்போது இல்லை. லியோன் திரைப்படத்திற்கு தங்களது குழந்தைகளுடன் வர நினைத்த பெற்றோர்களிடம் நாங்கள் இந்த தருணத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். லியோ திரைப்படம் கண்டிப்பான முறையில் 15+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே என தெரிவித்துள்ளது.
“LEO” is intense. With strong violence and detailed gory scenes that ended up being more graphic than even we anticipated, it’s not for the faint-hearted. Although we targeted a 15+ rating for “LEO”, the BBFC gave it an 18+, meaning only those aged 18 and up can see it in…
— Ahimsa Entertainment (@ahimsafilms) October 12, 2023