மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள‌ கர்கோன் பகுதியில் சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டுமான தளத்தில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளார். இவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை நேற்று கட்டுமான தளத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென தெரு நாய்கள் கூட்டமாக வந்து சிறுமியை கடித்து குதறியது. அந்த சமயத்தில் சஞ்சய் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அவருடைய மனைவி குளித்து கொண்டிருந்தார். இதனால் அவர்கள் அதை கவனிக்கவில்லை. இந்நிலையில் சிறுமியை நாய்கள் சுமார் 150 மீட்டர் வரை இழுத்துச் சென்று கடித்துக் குதறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சய் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். அதாவது நாய்கள் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுமி பரிதாபமாக இறந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.