சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி வருவதாக சரத்குமார் கூறியுள்ளார். விக்ரமனின் மகன் அறிமுகமாகும் ஹிட் லிஸ்ட் பட விழாவில் பேசிய அவர், எனக்கு 150 வயது ஆனாலும் பரவாயில்லை, சூரியவம்சம் 2,3,4 ஆகிய பாகங்களிலும் நடிப்பதற்கு தயாராக உள்ளேன் என கலகலப்பாக பேசியுள்ளார். விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான சூர்யவம்சம் திரைப்படம் சரத்குமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.