
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இருந்து 27 பயணிகளுடன் பேருந்து ஒன்று நைனிதல் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாதையில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 1500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 24 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.