
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகின்றார். சென்ற 15ஆம் தேதி லிங்கடின் என்ற இணையதளத்தை பயன்படுத்தி இருக்கின்றார்.
அப்போது அதில் பகுதிநேர வேலைக்கு ரூபாய் 1750 இல் இருந்து 3000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தினால் வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த லிங்கில் இருந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்ட போது அதன் மூலம் கிடைத்த ஒரு லிங்கிற்கு சென்றதும் டெலிகிராம் குழுவிற்கு இணைப்பு கொடுக்கப்பட்டு அதிலிருந்து ஜோதிக்குமாரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றார்.
அப்போது அந்த நபர் தெரிவித்தவாறு பயணக் குறியீடு பாஸ்வேர்ட் எண்ணை ஜோதி குமார் பதிவிட்டு இருக்கின்றார். மேலும் அந்த நபர் கிரிப்டோகரன்சில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் தருவதாக தெரிவித்து இருக்கின்றார். இதனை ஜோதிக்குமாரும் நம்பி சென்ற 16ஆம் தேதி அன்று ரூபாய் 15 ஆயிரத்தை மூன்று தவணைகளாக முதலீடு செய்து இருக்கின்றார்.
இதனால் அவருக்கு 17,600 கிடைத்துள்ளது. இதனால் 19ஆம் தேதி வரை தனது வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயும் தனது மனைவியின் வங்கி கணக்கிலிருந்து 90 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக 3 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கின்றார்.
ஆனால் அந்த மர்ம நபர்கள் ஜோதி குமாருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை லாபத்துடன் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ஜோதிகுமார் சைபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றார்கள்.