கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு கீழக்கடம்பூரை சேர்ந்த தொழிலாளர்களான பாலு(54), விநாயகம்(55), ராமலிங்கம்(60), வேல்முருகன்(33), வீராசாமி(39) ஆகிய ஐந்து பேரும் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீராசாமி உள்பட 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வீராசாமி மீதான குற்றம் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் வீராசாமிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் விநாயகம், ராமலிங்கம், பாலு, வேல்முருகன் ஆகிய நான்கு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.