இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது.

இந்நிலையில் விராலிமலை அருகே 16 வயது சிறுமி ஊதுபத்தி ஆலையில் பணி செய்து வந்தார். அவரிடம் நட்பாக பழகிய முபாரக் (32) திருமணம் செய்து கொள்வதாக கூறி பெங்களூரு அழைத்து சென்றிருக்கிறார். அங்கே சிறுமியுடன் உல்லாசமாக இருந்த அவர், பின்னர் நண்பர்களான நியாஸ் மற்றும் சதாம் உசேனுக்கு விருந்தாக்கி இருக்கிறார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் 3 பேரும் போக்ஸோ மற்றும் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.