வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி(22) என்ற பெண் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன்(22) என்று இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சாந்தினி ஜெகனை வேலூருக்கு வருமாறு கூறியுள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவரை சாந்தினி ஜெகனுக்கு அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சாந்தினியும் ஜெகனும் தான் சிறுமியை இறுதியாக சந்தித்து பேசியுள்ளனர். அதனால் போலீசார் அவர்களை விசாரித்த போது இருவரும் சேர்ந்து சிறுமியை கடத்தியது தெரியவந்தது.

மேலும் அந்த இளைஞன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் அடிப்படையில் ஜெகன் மீதும் சாந்தினி மீதும் குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து குற்ற பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்பு இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ரூ5000 ஆயிரம் அபராதமும், சாந்தினிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து து 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்பு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.