ஐஸ்லாந்து நாட்டின் பிரதமராக கிறிஸ்ட்ரூட்டின் ‌ப்ரோஸ்டாட்டிர் இருக்கிறார். இவருடைய அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் என்ற 58 வயது பெண் இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது தன்னுடைய சிறுவயது அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். இதுவே அவருடைய வாழ்க்கைக்கு பிரச்சனையாகி விட்டது. அதாவது அவருக்கு 22 வயது இருக்கும் போது ஒரு 16 வயது மாணவருடன் உடலுறவு வைத்து ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டதாக அவர் கூறினார்.

இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுத்தது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் பிரதமர் அவரை அழைத்து பேசினார். இதன் காரணமாக அவர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். மேலும் சிறுவன் ஒருவனுடன் இளம் வயதில் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக் கொண்டதாக மந்திரி ஒருவர் வெளிப்படையாக கூறி தன்னுடைய பதவிக்கு அவரே ஆப்பு வைத்துக் கொண்டது பரபரப்பாக பேசப்படுகிறது.