திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுகா சுமங்கலி கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்ற 24 வயது இளைஞர், நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 16 வயது மாணவியை கல்லூரிக்கு சென்று வரும்போது பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

தினம்தோறும் இவ்வாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நிலையில் மாணவி ஒரு கட்டத்தில் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.